/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வி.ஏ.ஓ., அலுவலகங்களில் மின், குடிநீர் வசதியில்லை அரசு அலுவலர் ஒன்றியம் புகார்

ADDED : ஜூலை 04, 2025 02:58 AM
சிவகங்கை: மாவட்டத்தில் பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள் மின் வசதி, குடிநீரின்றி இருப்பதாக அரசு அலுவலர் ஒன்றியத்தினர் கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் அருள்ராஜ், மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் தலைமையில் நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டரை சந்தித்தனர்.
அவரிடம் 3 மாதங்களுக்கு ஒரு முறை அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை அழைத்து குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர அரசை வலியுறுத்த வேண்டும். மாவட்ட அளவில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி உள்ளது.
வி.ஏ.ஓ.,க்களுக்கான பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் சார்ந்த ஆவணங்கள் கிடப்பில் உள்ளன. இளநிலை வருவாய் ஆய்வாளர் முதல் முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியல் வெளியிட வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் மனஅழுத்தத்தில் பணிபுரிவதை தவிர்க்க புத்தாக்க பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் முருகானந்தம், துணை தாசில்தார்கள் மருதுபாண்டியன், கமரூதீன், சுந்தரமூர்த்தி, அருள் உடனிருந்தனர்.