/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரோடு வசதி இல்லை; பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் மவுனம்
/
அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரோடு வசதி இல்லை; பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் மவுனம்
அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரோடு வசதி இல்லை; பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் மவுனம்
அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரோடு வசதி இல்லை; பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் மவுனம்
ADDED : ஆக 29, 2024 11:37 PM

தேவகோட்டை ஒன்றியம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதுபுளியால். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, நர்சிங்கல்லுாரி, நடுநிலைப் பள்ளி உள்ளது. தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லுாரியை ஒட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 300 மீட்டர் துாரத்திற்கு தார் ரோடு இருக்கிறது.
இந்த ரோடு பள்ளிக்கு செல்லும் ரோடு மட்டுமின்றி இலுப்பக்குடி, நெய்வயல் உட்பட மேலும் சில கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.
எந்த நேரமும் போக்குவரத்து அதிகமுள்ள ரோடாகும். இந்த ரோடு பல ஆண்டுகளாக பராமரிக்காமல் பல்லாங்குழிகளாக காட்சியளிக்கிறது. டூவீலர் கூட செல்ல முடியவில்லை. பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல முடியவில்லை.
மழைகாலத்தில் மாணவர்கள் செல்ல சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைத்து புதிய ரோடு அமைத்து தருமாறு பள்ளி சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராம சபை, குறைதீர் முகாம், மக்களுடன் முதல்வர், எம்.எல்.ஏ. உட்பட நடைபெறும் அனைத்தும் உயர் அதிகாரிகள் முகாமிலும் மனுகொடுத்து குறைகளை கூறினர். அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. ஒன்றிய அதிகாரிகள் வழக்கம் போல் ஏதாவது காரணம் கூறி நேரத்தை கடத்தி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் நிதியில்லை கிராவல் ரோடு போட்டு தருவதாகவும் நிதி வந்தவுடன் தார் ரோடு போட்டு தருவதாகவும் அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதி கூறினர்.
மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல், பள்ளி செல்லும் ரோட்டை சீரமைக்காமல் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். பள்ளங்களில் கற்கள் பெயர்ந்து மாணவர்கள் சைக்கிளில் இருந்து கீழே விழும் நிலை தொடர்கிறது.
கலெக்டர் பள்ளி மாணவர்கள் சிரமத்தை ஆய்வு செய்து புது ரோடு அமைத்து தர நிதி ஒதுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

