/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனை புதிய கட்டடம் அமைச்சர் உத்தரவால் மீண்டும் கலர் மாறுகிறது
/
அரசு மருத்துவமனை புதிய கட்டடம் அமைச்சர் உத்தரவால் மீண்டும் கலர் மாறுகிறது
அரசு மருத்துவமனை புதிய கட்டடம் அமைச்சர் உத்தரவால் மீண்டும் கலர் மாறுகிறது
அரசு மருத்துவமனை புதிய கட்டடம் அமைச்சர் உத்தரவால் மீண்டும் கலர் மாறுகிறது
ADDED : மே 27, 2025 12:55 AM

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்படும் கட்டடப்பணியை ஆய்வு செய்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கட்டடத்தில் பூசப்பட்ட கலர் சரியில்லை என்று கூறி மீண்டும் பணி முடிந்த கட்டடத்திற்கு கலரை மாற்ற கூறியதால் புதியதாக கட்டடத்தில் கலர் மாற்றும் பணி துவங்கியுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரூ.11.74 கோடி செலவில் 50 படுக்கையுடன் கூடிய ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டட கட்டுமானப்பணியும் முடிந்துள்ளது.
இந்த இரண்டு கட்டடத்தையும் கடந்த 21ஆம் தேதி அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த அமைச்சர் கட்டடத்தில் உள்ள அறைகளின் நுழைவுவாயில் நிலைகளில் கை வைத்து சரியில்லை என்றும் சுவரில் ஒட்டப்பட்ட டைல்ஸ் மேல்பகுதியில் சிமென்ட் பூச்சு சரியாக பூசவில்லை என்று கூறி அதிகாரிகளை கடிந்தார்.
பின்னர் கட்டடத்தின் முகப்பு பகுதியை பார்த்து பெயின்ட் கலர் யார் தேர்வு செய்தது. மற்ற அரசு மருத்துவமனையில் எவ்வாறு உள்ளது. இது என்ன கலர் என்று கடிந்து கொண்டார்.
அதிகாரிகளிடம் பெயின்ட் கலரை மாற்றவும் அது குறித்து தன்னிடம் தெரிவிக்குமாறு கூறி சென்றார். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டத்தில் பெயின்ட் கலரை மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. விரைவாக கட்டட பணியை முடித்து மருத்துவக் கல்லுாரி வசம் ஒப்படைக்கவேண்டும் என்று டாக்டர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.