/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாயமாகும் அரசு நிலங்கள் வருவாய்த் துறை அலட்சியம்
/
மாயமாகும் அரசு நிலங்கள் வருவாய்த் துறை அலட்சியம்
ADDED : ஜூலை 18, 2025 11:52 PM
திருப்புவனம்: மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நிலங்கள் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிராமம், நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளன.
இதில் அரசு கட்டடங்கள் கட்டப்பட்டது போக மீதியுள்ள இடங்கள் போதிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இன்றி உள்ளன.
வருவாய்த் துறை அதிகாரிகள் சிலரின் ஆதரவுடன் பலரும் அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ளதுடன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பட்டா உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றனர். வரும் காலத்தில் அரசுக்கு தேவையான கட்டடங்கள் கட்ட போதிய இடமின்றி தவிக்க வேண்டியுள்ளது.
திருப்புவனம் புதுாரில் அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ள சிலர் பட்டா கேட்டு விண்ணப்பிக்க நேர்மையான அதிகாரிகள் விசாரணை செய்த போது அது அரசு புறம்போக்கு இடம் என கண்டறிந்து மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். மாவட்டம் முழுவதும் அரசு இடங்கள் பலவும் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றன. கோர்ட் மூலம் மட்டுமே அவற்றை மீட்க முடிகிறது.
அரசு இடங்களை பாதுகாக்க வருவாய்த் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே புதிய கலெக்டர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.