/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் அரசு அலுவலக கட்டடம் இழுபறி
/
சாக்கோட்டையில் அரசு அலுவலக கட்டடம் இழுபறி
ADDED : டிச 30, 2024 08:00 AM
காரைக்குடி : சாக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம், தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டுவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இங்கு அரசுக்கு சொந்தமாக 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 3.5 ஏக்கரில் ரூ.5.83- கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுவதென முடிவானது. இந்த பணியை விரைந்து துவக்க வேண்டும். அதேபோன்று சாக்கோட்டையில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இதற்காக சொந்த கட்டடம் கட்ட போலீஸ் ஸ்டேஷன் பின்னால் 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளனர்.
இதனால் தற்சமயம் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே தீயணைப்பு நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.