/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி
/
அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி
அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி
அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி
ADDED : ஜூலை 15, 2025 03:35 AM

திருப்புவனம்: போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஏழரை லட்ச ரூபாய் நிதி உதவியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
நகை திருட்டு தொடர்பாக ஜூன் 27ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறந்த அஜித்குமார் குடும்பத்திற்கு நேற்று மாலை தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஏழரை லட்ச ரூபாய் நிதியை அவரது தாயார் மாலதியிடம் வழங்கி ஆறுதல் கூறினார். அமைச்சருடன் கலெக்டர் பொற்கொடி, ஆர்.டி.ஓ.,விஜயகுமார், எம்.எல்.ஏ., தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் சென்றனர்.
அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில் : அஜித்குமார் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அவர்களது கோரிக்கைகள் 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார். அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் கூறுகையில்: அரசு வழங்கிய இடம் குறித்து அதிருப்தி தெரிவித்தோம். மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். மடப்புரம் கோயிலிலேயே பணி வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.