ADDED : ஜூலை 15, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால், செக்காலை கல்லூரி சாலை ரயில்வே ரோடு உட்பட பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை பெய்தது. பள்ளி, கல்லுாரி விடும் நேரம் என்பதால் மாணவ மாணவியர் நனைந்து கொண்டே வீடு களுக்கு திரும்பினர். கோடிக்கோட்டை, புளியால், அனுமந்தக்குடி, கண்ணங்குடி, திருமணவயல், காரை பகுதிகளிலும் மழை பெய்தது.