/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செருதப்பட்டியை புறக்கணிக்கும் அரசு டவுன் பஸ்களால் தவிப்பு
/
செருதப்பட்டியை புறக்கணிக்கும் அரசு டவுன் பஸ்களால் தவிப்பு
செருதப்பட்டியை புறக்கணிக்கும் அரசு டவுன் பஸ்களால் தவிப்பு
செருதப்பட்டியை புறக்கணிக்கும் அரசு டவுன் பஸ்களால் தவிப்பு
ADDED : ஏப் 29, 2025 11:49 PM
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே செருதப்பட்டிக்கு வராமல் புறக்கணிக்கும் டவுன் பஸ்சால் ஐந்து கிராம மக்கள் இருட்டில் தவிக்கின்றனர்.
சிங்கம்புணரியில் இருந்து செருதப்பட்டிக்கு திருப்புத்துார் டெப்போவில் இருந்து டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் பல பஸ்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்ட நிலையில், இந்த பஸ் மட்டும் இயக்கப்படாமல் விடுபட்டது.
சமத்துவபுரம் திறக்க முதல்வர் ஸ்டாலின் வந்தபோது அப்பகுதி மக்கள் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் இந்த டவுன் பஸ்சை மீண்டும் துவக்கி வைத்தார்.
சில நாட்களில் மீண்டும் பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் அது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக டவுன் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.
தற்போது சில மாதங்களாக காலையில் மட்டுமே இப்பேருந்து இயக்கப்படுகிறது. மாலை நேரத்தில் செருதப்பட்டி செல்லாமல் சிங்கம்புணரியில் நிறுத்தி வைத்திருந்து திருப்புத்துாருக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர்.
இதனால் சிங்கம்புணரிக்கு வரும் விவசாயிகள், மாணவர்கள் இரவு நேரத்தில் நடந்தே இருட்டில் செருதப்பட்டி திரும்பும் நிலை உள்ளது.
இது குறித்து திருப்புத்துார் பஸ் டெப்போ மேலாளரிடம் கேட்டபோது, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஓட்டுநர் நடத்துனரிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த வழித்தடத்தில் உரிய நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

