/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் டிச. 26ல் உண்ணாவிரதம்: அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் அறிவிப்பு

ADDED : டிச 01, 2025 06:43 AM
சிவகங்கை: ''சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் சார்பில் டிச., 26ல் சென்னையில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,'' என, சிவகங்கையில் அதன் பொது செயலாளர் குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 15 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். 2009 மே 31க்கு பிறகு தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை கலைந்து ஓட்டுனர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
அரசுத்துறையில் பணிபுரியும் ஓட்டுனர்கள் கால நேரம் இன்றி புயல், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும் அலுவலர்களுடன் இணைந்து பணிபுரிகிறோம். தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
இக்கோரிக்கையை முன்வைத்து டிச., 26 சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். அரசுத்துறையில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைக்கு வழங்கப்படும் ரொக்க பரிசு 10 ஆண்டுக்கு ரூ.500 என்பதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் பணிபுரிந்த சிறப்பு நிலை ஓட்டுநர்களுக்கு 4 கிராம் தங்க மெடலை 8 கிராமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு மேலான கழிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக அரசு புதிய வாகனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.