/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு
/
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 1082 பேர் பங்கேற்பு
ADDED : டிச 01, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 46 கிராம உதவியாளர்பணிக்கு நடந்த எழுத்துதேர்வில், 1082 பேர் பங்கேற்றனர்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்புத்துார், சிங்கம்புணரி தாலுகாக்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 1,362 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நவ., 22 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடந்தது. இத்தேர்வில் 1,082 பேர் மட்டுமே பங்கேற்றனர். தொடர் மழையின் காரணமாக இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி கிராம உதவியாளர் தேர்வுக்கான தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.