ADDED : டிச 08, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிங்கம்புணரியில் விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். அமைச்சர்பெரியகருப்பன் 4,532 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேவகோட்டை சார் ஆட்சியர்ஆயுஷ்வெங்கட் வட்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்அரவிந்த், மகளிர் திட்ட இயக்குநர் கவிதாபிரியா, பேரூராட்சி தலைவர்கள் அம்பலமுத்து, சேங்கைமாறன் பங்கேற்றனர்.

