/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீசாருடன் வாக்குவாதம்: எச்.ராஜா மீது வழக்கு
/
போலீசாருடன் வாக்குவாதம்: எச்.ராஜா மீது வழக்கு
ADDED : டிச 08, 2025 05:24 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே நாச்சியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பா.ஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மீது மதவாதத்தை துாண்டும் விதத்தில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே கும்பங்குடியில் டிச., 4 ல் காரில் திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்றதாக எச்.ராஜாவை, டி.எஸ்.பி., செல்வகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா, 'நான் நடித்து கொண்டிருக்கும் கந்தன்மலை திரைப்படத்திற்கான டப்பிங் பேசுவதற்காக செல்கிறேன். ஏன் என்னை தடுக்கிறீர்கள். விடுங்கள்' என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அமைச்சர், மதுரை கலெக்டர், கமிஷனரை விமர்சனம் செய்து பேசினார். இதனால் எச்.ராஜா, அவரது கார் டிரைவர் மோகன் மீது போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மதவாதத்தை துாண்டும் விதத்தில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

