ADDED : பிப் 17, 2024 05:07 AM
காரைக்குடி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் இருந்து நவகிரகங்களுக்கும் ஒரே பஸ்சில் ஒரே நாளில் பயணம் செய்ய சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.
கும்பகோணத்திலிருந்து அதனை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்களுக்கு பிப்.24 முதல் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. நபர் ஒன்றுக்கு ரூ.750 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஸ் முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 6:00 மணிக்கு கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும்.
திங்களூர் சந்திரன் கோயில் தொடங்கி ஆலங்குடி குருபகவான், திருநாகேஸ்வரம் ராகு பகவான், சூரியனார் கோயில், கஞ்சனுார் சுக்கிரன் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் கிரகம், திருவெண்காடு புதன் கோயில், பெரும்பள்ளம் கேது பகவான் கோயில், திருநள்ளாறு சனிபகவான் கோயில்கள் சென்று விட்டு இரவு 8:00 மணிக்கு கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் வந்தடையும்.
பிப்.24 முதல் வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் நவக்கிரக சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
பயணிகள் www.tnstc.inஇணையதளம் மூலமும்,அலைபேசி செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.