/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கல்லுாரியில் பட்டமளிப்பு தாமதம்
/
சிவகங்கை கல்லுாரியில் பட்டமளிப்பு தாமதம்
ADDED : ஏப் 10, 2025 06:07 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மன்னர் கலை கல்லுாரியில் இரண்டு ஆண்டாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் தாமதிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மன்னர் அரசு கலை கல்லுாரியில் பி.ஏ., தமிழ், வரலாறு, ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இளங்கலை, முதுகலை படிப்பு இரண்டு சுழற்சியிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இரண்டு கல்வி ஆண்டாக கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் இங்கு பயின்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெறாமல் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். கல்லுாரி நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி விரைவாக பட்டமளிப்பு விழாவை நடத்தி படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பு முதல்வர் அழகுசாமி கூறுகையில், இந்தாண்டு பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முயற்சி நடந்து வருகிறது என்றார்.

