ADDED : ஜூலை 26, 2011 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கையில் சிறு, குறுந்தொழில்கள் சங்கம் சார்பில், கிராபைட் உப தொழில்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
சங்க மாநில துணை தலைவர் ஞானசம்பந்தம் வரவேற்றார். கிராபைட் உப தொழில் ஆலோசகர் டாக்டர் ஷா முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் விஜயலட்சுமி தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். மாநில தலைவர் தங்கராஜ், சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், உதவி இயக்குனர் ஆதிமூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் ராமதாசு, வர்த்தக சங்க தலைவர் கருணாநிதி பங்கேற்றனர். சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார். சங்க செயலாளர் கண்ணப்பன் ஏற்பாட்டை செய்தார்.