/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலுப்பக்குடியில் கிராபைட் துகள் விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
/
இலுப்பக்குடியில் கிராபைட் துகள் விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
இலுப்பக்குடியில் கிராபைட் துகள் விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
இலுப்பக்குடியில் கிராபைட் துகள் விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
ADDED : டிச 25, 2025 05:34 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் கிராபைட் துகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை அருகே இலுப்பக்குடி, அரசனுார், கிளாதிரி உள்ளிட்ட பகுதிகளில் 1,500 ஏக்கரில் விவசாயிகள் 250 க்கும் மேற்பட்ட கிணற்று பாசனம் மூலம் காய்கறி, நெல், கரும்பு விளைவித்து வருகின்றனர். இது தவிர இலுப்பக்குடி, விண்ணத்தங்குடி, பெருங்கரை கண்மாய்கள் மூலமும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் உள்ள 1,500 ஏக்கரில் முதற்கட்டமாக இலுப்பக்குடியில் உள்ள 650 ஏக்கரில் கிராபைட் துகள் எடுக்க,ஆழ்துளை கிணறு மூலம் கிராபைட் துகள்களின் தன்மை,கடினம் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் கிராபைட் துகள் எடுத்தால் விவசாயம் பாதிக்கும் எனக்கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், ராமு உட்பட அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் பி.ஏ.,(பொது) விஜயக்குமாரிடம் மனு அளித்தனர்.

