ADDED : அக் 01, 2024 04:55 AM
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில், பிரதமர், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய மருத்துவமனைக்கு கலெக்டர் ஆஷா அஜித் பாராட்டு சான்று வழங்கினார்.
சிவகங்கையில் கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். குடிநீர் பிரச்னை, பட்டா, ரேஷன் கார்டு கேட்டு 356 பேர் மனு செய்தனர். இந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். கூட்டத்தில் பிரதமர், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 6 அரசு, தனியார் மருத்துவமனை, தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றினை கலெக்டர் வழங்கினார். புதிதாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. இது தொடர்பாக நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற முத்துப்பட்டி அரசு நடுநிலை பள்ளி, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 6 மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். ///