/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் குறைதீர் மனுக்கள் பதிவு: திங்கள் தோறும் நெரிசலில் சிக்கி மக்கள் தவிப்பு
/
சிவகங்கையில் குறைதீர் மனுக்கள் பதிவு: திங்கள் தோறும் நெரிசலில் சிக்கி மக்கள் தவிப்பு
சிவகங்கையில் குறைதீர் மனுக்கள் பதிவு: திங்கள் தோறும் நெரிசலில் சிக்கி மக்கள் தவிப்பு
சிவகங்கையில் குறைதீர் மனுக்கள் பதிவு: திங்கள் தோறும் நெரிசலில் சிக்கி மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 24, 2025 06:58 AM

சிவகங்கை மாவட்ட அளவில் 9 தாலுகாக்களில் தாசில்தார் அலுவலகம், பிற துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை. இதனால், திங்கள் தோறும் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் பொது குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க, 500 முதல் 1,000 பேர் வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
கோரிக்கை மனுக்களுடன் வரும் மக்கள் முதலில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனுவை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் வழங்கும் ஒப்புதல் சீட்டுடன், முதல் மாடியில் நடக்கும் குறைதீர் கூட்ட அரங்கிற்கு சென்று கலெக்டரிடம் நேரடியாக மக்கள் மனு அளிப்பர்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் தோறும் கலெக்டரிடம், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, கல்வி உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை கோருதல் உட்பட ஏராளமான கோரிக்கைகளுக்கு மனு அளிக்கின்றனர். மனுவை பெறும் கலெக்டர் உரிய துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து விடுவார். இதனால், திங்கள் தோறும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விடுவார்கள்.
மனுக்கள் பதியுமிடத்தில் நெரிசல்
பொது குறைதீர் கூட்ட மனுக்களை பதிவு செய்ய, சமூக பாதுகாப்பு நல திட்ட அதிகாரிகள் கூடுதல் கம்ப்யூட்டர், ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆனால், இங்கு போதிய கம்ப்யூட்டர், ஊழியரின்றி மனுக்களை பதிவு செய்ய மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால், மனுக்கள் பதியும் இடத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துவிடுகிறது.
மனுக்களை பதிவு செய்து, கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்குவதற்குள் மதியம் 12:00 மணி வரை ஆகிறது.
இக்கால தாமதத்தால் சில நேரங்களில் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்க முடியாமல், பிற மாவட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
எனவே, குறைதீர் கூட்ட மனுக்களை காலதாமதமின்றி பதிவு செய்து தரவும், துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க அதிகாரிகளை கலெக்டர் ஆஷா அஜித் வலியுறுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

