/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகையில் நீர் வரத்தால் நிலத்தடி நீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
வைகையில் நீர் வரத்தால் நிலத்தடி நீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
வைகையில் நீர் வரத்தால் நிலத்தடி நீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
வைகையில் நீர் வரத்தால் நிலத்தடி நீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 29, 2025 07:57 AM

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து தேனி,திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மானாமதுரை சுற்று வட்டார வைகை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம பகுதி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இடைக்காட்டூர் ,முத்தனேந்தல்,பீசர்பட்டினம், கால்பிரவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதை தொடர்ந்து நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளதால் இந்த வருடம் விவசாயம் நல்ல முறையில் நடைபெறும் என கூறினர்.
மதுரை மாவட்டம் விரகனுார் மதகு அணையிலிருந்து மானாமதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மதகு அணை வரை உள்ள வைகை ஆற்று பகுதியில் மதுரை,அருப்புக்கோட்டை, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, கடலாடி சாயல்குடி, முதுகுளத்தூர் போன்ற ஊர்களுக்கு கூட்டு குடிநீர் திட்ட ஆழ்குழாய், உறை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஆற்றில் வரும் தண்ணீரால் குடிநீர் திட்டங்களின் நிலத்தடி நீர்மட்டமும் நன்கு உயர்ந்து போதுமான அளவிற்கு குடிநீர் கிடைக்கும் என்பதால் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

