/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் காவலாளி வெட்டிக்கொலை
/
மானாமதுரையில் காவலாளி வெட்டிக்கொலை
ADDED : மே 29, 2025 12:37 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே தோப்பில் காவலாளியாக வேலை செய்த முதியவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோப்பு தெ. புதுக்கோட்டை செல்லும் வழியில் பிரத்தியங்கரா தேவி கோயிலுக்கு அருகே உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருமாள்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் 64, என்ற முதியவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6:30 மணிக்கு தோப்பில் முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். எஸ்.பி.,ஆஷிஷ் ராவத், மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.