நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு என் கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து மாணவர்களுக்கான கையேடு உள்ளிட்ட எழுதுபொருள் உபகரணங்களை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆனந்தி, தனி வட்டாட்சியர் கந்தசாமி, உயர்கல்வி வழிகாட்டு வல்லுநர்கள் அர்னால்டு பிரளென், கிறிஸ்துராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகுமணி பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

