/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி
/
சிங்கம்புணரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி
ADDED : செப் 21, 2024 05:34 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் உயர்வுக்கு படி வழிகாட்டல் முகாம் தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஸ் வெட்கட் தலைமையில் நடந்தது.
பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேராத 90 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 56 மாணவர்கள் உயர் கல்வி பயில விருப்பம் தெரிவித்தனர். இதில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 15 பேருக்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 20 மாணவர்களுக்கும் உடனடி சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து ஸ்டால் அமைத்து மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை செய்தனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து பேசினர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், வழிகாட்டி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ நன்றி கூறினார்.