/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கொலை வழக்கு 5 பேர் மீது 'குண்டாஸ்'
/
மானாமதுரை கொலை வழக்கு 5 பேர் மீது 'குண்டாஸ்'
ADDED : அக் 26, 2024 05:04 AM
சிவகங்கை: மானாமதுரை அருகே கீழப்பசலையில் முன்விரோதம் காரணமாக பிரவீனை 19, கண்மாய்க்குள் வைத்து வெட்டி கொலை செய்த வழக்கில், 5 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே கீழப்பசலை ராஜா மகன் பிரவீன் 19. இவர் கூலி வேலை செய்துவருகிறார்.செப்.,2ம் தேதி முன்விரோதம் காரணமாக இவரை கீழப்பசலை கண்மாய்க்கு அழைத்து சென்று, மானாமதுரை கிழங்காட்டூர் சண்முகம் மகன் அமர்நாத் 23, சங்கமங்கலம் ரவி மகன் சசிக்குமார் 23, ராமையா மகன் ரகுபதி 19, கல்குறிச்சி கணபதி மகன் சுதர்சன் 19, சங்கமங்கலம் நடுத்தெரு சுரேஷ் மகன் தனுஷ் 21 ஆகிய 5 பேரும் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர்.
மானாமதுரை போலீசார் இவர்களை கைது செய்தனர். கொலை வழக்கில் ஈடுபட்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சிவகங்கை எஸ்.பி.,பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை சிறையில் இருந்த 5 பேரிடமும் மானாமதுரை போலீசார் ஒப்படைத்தனர்.