ADDED : ஏப் 10, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபடும் நான்கு பேரை குண்டர் தடுப்புகாவலில் அடைக்க எஸ்.பி., பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் செல்வக்குமார், கார்த்திக். சாலைக்கிராமம் பகுதியில் மணல் திருட்டு, ஆள் கடத்தலில் ஈடுபட்ட புகழேந்தி. தேவகோட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சரவணன் உள்ளிட்ட 4 பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.