நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதகுபட்டி மகேந்திரகிரி சுவாமி ஆசிரமத்தில் குருபூஜை விழா நடந்தது. ஜன.26 அன்று மாலை 5:00 மணிக்கு விளக்கு பூஜை, இரவு 8:00 மணிக்கு சொற்பொழிவு நடந்தது.
நேற்று காலை 8:30 மணிக்கு யாக, கோ பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு பூர்ணாகுதி, சுவாமிக்கு ஆராதனை நடந்தது.
விழாவில் தேவாரம், திருவாசகம், பாராயணம் நடைபெற்றது. காலை, 10:30 மணிக்கு அன்னக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. சிவாச்சாரியார் சிவசுப்பிர மணியன் தலைமையில் பூஜை நடைபெற்றது.