நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடந்தது.
திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில்.இக் கோயிலில் திருநாவுக்கரசருக்கு தனி சன்னதி உண்டு.
வருடந்தோறும் வேலப்ப தேசிகர் திருக்கூட்டம் சார்பில் திருநாவுக்கரசர் பெருமான் குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு குருபூஜை விழா சங்கரன்கோவில் சுப்ரமணியன் ஓதுவார் தலைமையில் தொடங்கியது. நால்வர் சன்னதியில் செந்தில் பட்டர், விவேக் பட்டர், அசோக் பட்டர் அபிஷேக ஆராதனையை நடத்தினர். இரவு திருநாவுக்கரசர் உற்ஸவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

