
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜை விழா நடந்தது.
நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், பக்திசொற்பொழிவு முடிந்து தீபாராதனைக்கு பின் திருஞானசம்பந்தர் உற்ஸவப்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.