நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமி 700 வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
நேற்று காலை குருமூர்த்தி, காளத்திநாதர், சண்முகநாதப் பெருமான் வழிபாட்டுடன் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பொன்மணி கதிர்கள் நுால் வெளியீட்டு விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமையேற்று வாழ்த்தினார். பேராசிரியர் கரு. நாகராஜனுக்கு கவிஞர்கோ பட்டம் வழங்கி பாராட்டப்பட்டது. பழநி கந்த விலாஸ் நிறுவனர் செல்வக்குமாருக்கு அறமனச் செம்மல் பட்டம் வழங்கி பாராட்டப்பட்டது.
மாணிக்கவேலு, செல்வகுமார், சேது குமணன், அருள்ராஜ் நுாலினை பெற்றுக் கொண்டனர். அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் அறுபதும் நூறும் என்ற தலைப்பில் பேசினார்.