sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தமிழகத்தில் கூட்டணியாக நின்றேசட்டசபை தேர்தலை சந்திப்போம் சொல்கிறார் எச்.ராஜா

/

தமிழகத்தில் கூட்டணியாக நின்றேசட்டசபை தேர்தலை சந்திப்போம் சொல்கிறார் எச்.ராஜா

தமிழகத்தில் கூட்டணியாக நின்றேசட்டசபை தேர்தலை சந்திப்போம் சொல்கிறார் எச்.ராஜா

தமிழகத்தில் கூட்டணியாக நின்றேசட்டசபை தேர்தலை சந்திப்போம் சொல்கிறார் எச்.ராஜா


ADDED : ஜூன் 11, 2025 02:31 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:''தமிழகத்தில் கூட்டணியாக நின்றே 2026 சட்டசபை தேர்தலில் மக்களை சந்திக்க உள்ளோம்,'' என, சிவகங்கை அருகே நகரம்பட்டியில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்த நாள்விழாவில் பங்கேற்ற பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாதெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு சிவகங்கைக்கு உண்டு. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரலாற்று தலைவர்களின் சரித்திரத்தை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். தி.மு.க., அரசு, உளறலில்முதலிடத்தில் உள்ளது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதளவிற்கு ஊழல், ஊரல், போதை இவற்றில் தமிழக மக்கள் சிக்கியுள்ளனர்.

போதைப் பொருள் அதிகம் புழங்கும் மாநிலமாக தமிழகம் இருப்பது பெற்றோருக்கு கவலையளிக்கிறது. வருங்கால சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது.

அடுத்த தலைமுறையை காக்கும் எண்ணம் இருப்பவர்கள் வரும் தேர்தலில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து துாக்கி எறிய வேண்டும். 2026 தேர்தலில் தி.மு.க., இருந்த இடம் தெரியாமல் துாக்கி எரியப்படும்.

கூட்டணியாக தான் மக்களை அணுகுகிறோம். பழநியில் நடத்தியது ஆன்மிக மாநாடு இல்லை என தி.மு.க., துணை முதல்வர் உதயநிதியே பேசினார். வரும் தேர்தலில் தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என நிரூபிக்கப்படும் என்றார்.

தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்


இவ்விழாவில் பங்கேற்ற அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி முக்கிய கட்சி பா.ஜ., தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இக்கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன.

இன்னும் தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அனைத்தும் இங்கு வரவேண்டும். கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. அதற்கு ஆதரவாக நாங்கள்உள்ளோம்.

வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த போகிறோம். மக்கள் விரோத தி.மு.க.,வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம். எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பது தான் என்றார்.






      Dinamalar
      Follow us