/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டாம் என வலியுறுத்துவோம் சொல்கிறார் எச்.ராஜா

ADDED : ஏப் 04, 2025 03:12 AM
காரைக்குடி:''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டாம்'' என மக்களிடம் வலியுறுத்துவோம் என்று பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது:
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய திருத்த மசோதாவை இஸ்லாமிய பெண்கள் உட்பட பலரும் வரவேற்றுள்ளனர். நாட்டில் ராணுவம், ரயில்வேக்கு அடுத்தபடியாக வக்ப் வாரியத்திற்கென 12 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த வாரியத்தின் வருமானம் ரூ.126 கோடி. ஏழை, எளிய மக்கள் இந்த மசோதாவை வரவேற்கின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பெட்டிஷன் முதல்வராகிவிட்டார். ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படும். இதை எதிர்ப்பவர்களுக்கு 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தி.மு.க., ஆட்சி நீடித்தால் அடுத்த தலை முறையினருக்கு ஆபத்து.
தி.மு.க., அரசை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டளிக்காதீர்கள் என மக்களிடம் கேட்டு வலியுறுத்துவோம். மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் என்பது புரளி தான். இதை தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.
பா.ஜ.,வில் இருமுறை தலைவராக இருக்கலாம். கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த கிஷன்ரெட்டி வருகை தர உள்ளார் என்றார்.