/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் அனுமன் ஜெயந்தி விழா
/
சிவகங்கையில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : டிச 31, 2024 04:33 AM
சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அனுமனுக்கு நேற்று காலை 10:15 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வெள்ளி அங்கியில் அனுமன் காட்சி அளித்தார். சிவகங்கை செட்டியூரணி கரையில் அமைந்துள்ள அனுமன் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. வெள்ளி அங்கி, வடைமாலையுடன் எழுந்தருளிய அனுமனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவகங்கை அருகே க.சொக்கநாதபுரம் ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மகா சுதர்சன ேஹாமம், சுமங்கலி பூஜை நடந்தது.
* சிங்கம்புணரியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அருவியூர் தெற்கு வளவு நகரத்தாருக்கு பாத்தியப்பட்ட ராமர் கோயிலில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள அனுமனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வடை மாலை, துளசி மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் அனுமன் காட்சியளித்தார்.
* தேவகோட்டை ஆதிசங்கரர் கோவிலில் பக்த ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை நடந்தது. நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து திருமஞ்சனம் நடைபெற்றது. ரங்கநாத பெருமாள் கோவிலில் உள்ள வெற்றி தரும் யோக ஆஞ்சநேயர், மேல்செம்பொன் மாரி அய்யனார் கோவிலில் ஜெயவீர ஆஞ்சநேயர், தேவகோட்டை சக்தி முத்துகுமாரசுவாமி கோவிலில் உள்ள அனுமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
* மானாமதுரை வீர அழகர் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அதிகாலை பால், பன்னீர்,சந்தனம், இளநீர், தயிர்,வெண்ணெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு வடை மாலை சாத்தப்பட்டு அலங்காரம் நடந்தது.தொடர்ந்து அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற்றன. உற்சவர் வீர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் அப்பன் பெருமாள் கோயில், ஆற்றுப்பாலம் இறக்கத்தில் உள்ள அனுமன் கோவில், சுந்தரபுரம் விநாயகர் கோயில் பிருந்தாவன அக்ரஹார தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், இளையான்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பூஜைகள் நடைபெற்றன.
* திருப்புத்துார் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு நித்யபடி பூஜை நடந்து பக்தர்கள் தரிசனம் துவங்கியது. தொடர்ந்து காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்து வடை மாலை, ரூபாய் மாலையுடன் தங்க அங்கி அணிந்து மூலவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆஞ்சநேயர்,விநாயகர் சன்னதி முழுவதும் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில் மூலவர் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கு தீபாராதனை நடந்து சுவாமி திருவீதி உலா நடந்தது.