/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகனங்களின் ஒலிபெருக்கியால் தொல்லை
/
வாகனங்களின் ஒலிபெருக்கியால் தொல்லை
ADDED : ஆக 26, 2025 03:39 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் கொரோனா காலத்தில் மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க மக்களின் குடியிருக்கும் இடத்திற்கே வாகனங்களில் சென்று காய்,கனிகள் விற்க அனுமதி வழங்கப்பட்டன. குறைந்த திறன் உள்ள ஒலி பெருக்கிக்கு அனுமதி கொடுத்தனர்.
ஒரு சில வாகனங் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தினசரி மார்க்கெட், வார சந்தை, மற்றும் அனைத்து கடைகளும் முழுதுமாக செயல்படும் நிலையில் தற்போது புற்றீசல் போல் அதிகளவில் வாகனங்கள் மூலம் விற்பனை நடை பெறுகிறது. காய்கறி மட்டும் இன்றி அனைத்து பொருட்களும் வாகனங்கள் மூலம் நடக்கிறது.
எந்த வித அனுமதி யில்லாமல் அதிகளவு சத்தத்துடன் கூம்பு வடிவ ஒலி பெருக்கி மூலம் வீதிகளில் வலம் வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் முக்கியமான சில இடங்களில் இரவு 9:00 மணி வரையிலும் வாகனங்களை நிறுத்தி ஒலிபெருக்கியில் அழைத்து விற்பனை செய்கின்றனர்.
எந்த வித அனுமதியின்றி, அதிக சத்தத்துடன் காதை செவிடாக்கும் வகையில் ஒலி பெருக்கி மூலம் வாகனங்களில் பொருட்கள் விற்பவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.