/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெளி மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வருகை
/
வெளி மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வருகை
வெளி மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வருகை
வெளி மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வருகை
ADDED : பிப் 08, 2025 05:04 AM

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடியில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதை தொடர்ந்து வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள் அதிகளவில் வர துவங்கியுள்ளன.
மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் ஆயிரக்கணக்கான எக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு கடந்த சில வாரங்களாக அறுவடை நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட பகுதிகளில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஏராளமான நெல் வியாபாரிகளும் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரை, இளையான்குடி பகுதியில் அனைத்து கிராம பகுதிகளிலும் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை லாரி மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.
நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கூறியதாவது, தமிழகத்தின் வட மாவட்டங்களில் தற்போது அறுவடை பணி முடிவு பெற்றதை தொடர்ந்து அங்கு அறுவடை இயந்திரங்களுக்கு போதிய வேலை இல்லாமல் இருந்ததால் தற்போது தென் மாவட்டங்களில் அறுவடை நடைபெற்று வருவதால் அங்கிருந்து இயந்திரங்களை மானாமதுரை, இளையான்குடி பகுதிக்கு கொண்டு வந்துள்ளோம் என்றனர்.