ADDED : செப் 20, 2025 11:49 PM
சிவகங்கை:காளையார்கோவில் ேஹாலி ஸ்பிரிட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமினை கலெக்டர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 கர்ப்பிணிகளுக்கு சஞ்சீவி பெட்டகங்களும், 32 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலிகளை அமைச்சர் வழங்கினார்.
வருவாய் கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, மருத்துவ இணை இயக்குநர் அருள்தாஸ், மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் பாபா, காளையார் கோவில் தாசில்தார் லெனின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.