/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆடு வதை கூடத்தில் அறுக்காததால் சுகாதாரக்கேடு
/
ஆடு வதை கூடத்தில் அறுக்காததால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 06, 2025 04:12 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் ஆடு வதை கூடத்தில் ஆடுகளை பரிசோதித்து அறுக்காமல் தெருக்களில் அறுப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு தெருக்களிலும் இறைச்சி கடைகள் உள்ளன. கோழி, ஆடு, மீன்கள் விற்பனை நடக்கிறது.
ஆடுகளை இறைச்சிக்காக வெட்டப்படும் முன் சுகாதார அலுவலர்கள் பரிசோதனை செய்த பின், ஆடு வதை கூடத்தில் வைத்து மட்டுமே அறுக்க வேண்டும். ஆனால், ஆடு வதை கூடத்தில் அறுக்காமல் அந்தந்த கடைகளுக்கு முன் அறுத்து, அதன் கழிவுகளை கால்வாயில் கொட்டி விடுகின்றனர். இதனால் நோய் பரவும் அச்சம் மக்களிடம் ஏற் பட்டுள்ளது.