/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்க மாநாடு
/
அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்க மாநாடு
ADDED : அக் 06, 2025 04:13 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பேரவை மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாக்கியமேரி வேலை அறிக்கை வாசித்தார்.
மாவட்ட பொருளாளர் லட்சுமி வரவு செலவு அறிக்கை வாசித்தார். மின்வாரிய ஊழியர் மத்திய கூட்டமைப்பு நிர்வாகி உமாநாத், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோரிக்கைகளை விளக்கி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொருளாளர் தேவமணி பேசினார்.
அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என தீர்மானித்தனர்.