/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட மாநாடு
/
முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட மாநாடு
ADDED : அக் 06, 2025 04:31 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. வரவேற்பு குழு தலைவர் பாண்டிவேல் தலைமை வகித்தார். மாவட்ட குழு போஸ், கலைவாணி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் கமல்ராஜன் வரவேற்றார்.
சுந்தர்ராஜன், கார்த்திகேயன், டாக்டர் தங்கத்துரை ஆகியோர் கண்காட்சியை துவக்கிவைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். கிளை தலைவர் சிபூ, கவிஞர்கள் சாதிக், ோகன், நாகநாதன், கலையரசன், மகாபிரபு, ஜீவானந்தம் ஆகியோர் கவிச்சரம் வாசித்தனர். மாநில துணை தலைவர் முத்துநிலவன், மாவட்ட துணை தலைவர் தேவதாஸ், செயற்குழு மாரியப்பன், கீதா, துணை செயலாளர் ராஜேந்திரன் தீர்மானங்களை வாசித்தனர்.
மாநில துணை செயலாளர் ஸ்ரீரசா துவக்க உரை ஆற்றினார். மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி, மாவட்ட செயலாளர் அன்பரசன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சிவகங்கை தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும். மக்களிசை மேதை சீனிவாசனுக்கு நினைவிடம் அமைக்கவும், வைகை ஆற்றை பாதுகாக்க வேண்டும். தேவகோட்டையில் அரசு மேல்நிலை பள்ளி துவக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட குழு ஜகுபர் நிஷா பேகம் நன்றி கூறினார்.