/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரை--பரமக்குடி 4 வழிச்சாலையை 2026க்குள் தரம் உயர்த்த திட்டம்
/
மதுரை--பரமக்குடி 4 வழிச்சாலையை 2026க்குள் தரம் உயர்த்த திட்டம்
மதுரை--பரமக்குடி 4 வழிச்சாலையை 2026க்குள் தரம் உயர்த்த திட்டம்
மதுரை--பரமக்குடி 4 வழிச்சாலையை 2026க்குள் தரம் உயர்த்த திட்டம்
ADDED : அக் 06, 2025 04:42 AM
திருப்பாச்சேத்தி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான 4 வழிச்சாலையின் தரத்தினை அடுத்த ஆண்டிற்குள் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற கடந்த 2010ல் திட்டமிடப்பட்டது. 2015ல் 934 கோடி ரூபாய் செலவில் மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட சாலையாகவும் அமைக்கும் பணி தொடங்கி 2017ல் முடிவடைந்தது.
ஆனால் திட்டமிட்டதை விட செலவீனமும் அதிகரித்து விட்டது. 2018 முதல் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி, போகலூர் ஆகிய இரு இடங்களில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து குறிப்பிட்ட சில இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் கணக்கிடப்படும், கடந்த சில வருடங்களாக மதுரை- - பரமக்குடி சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாலும் சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளதாலும் சாலையின் தரத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.