/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகரிக்கும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
/
அதிகரிக்கும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 28, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் திறந்து விட்டு வளர்க்கப்படும் பன்றிகளால் நகரில் சுகாதார சீர்கேடு ஏற் படுகிறது.
இப்பேரூராட்சியில் அம்பேத்கர் நகர், குறிஞ்சி நகர், வடக்கு வேளார் தெரு, முத்தையா காலனி, கக்கன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.
வெளியூர்களில் இருந்து பிடித்து வெளியேற்றப்படும் பன்றிகளை சிலர் இப்பகுதியில் கொண்டு வந்து தெருக்களில் வளர்க்கின்றனர். அவை நகர் முழுதும் சுற்றித்திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
சில இடங்களில் பன்றிகள் இறந்து உடல் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே நகரில் பன்றிகளை ஒழிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

