/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவ காப்பீடு குறித்த பிரசாரம்
/
மருத்துவ காப்பீடு குறித்த பிரசாரம்
ADDED : ஜூன் 05, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், மற்றும் நிர்வாக அலுவலர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்ட மோசடியை கண்டித்து பிரசாரம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் ரா. போசு தலைமையேற்றார். செயலாளர் ரங்கசாமி வரவேற்றார். பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் காசிநாதன், பா.ஜ., மாவட்டத் தலைவர் பாண்டித்துரை அ.தி.மு.க., மாநகரச் செயலாளர் மெய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.