/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக சுகாதார செவிலியர் சங்கம் குமுறல்
/
கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக சுகாதார செவிலியர் சங்கம் குமுறல்
கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக சுகாதார செவிலியர் சங்கம் குமுறல்
கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக சுகாதார செவிலியர் சங்கம் குமுறல்
ADDED : நவ 16, 2025 01:52 AM
சிவகங்கை: தமிழகத்தில் பொது சுகாதாரத்துறையில் பெண் செவிலியர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க நிறுவனர் இந்திரா தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 2147 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும் என்று கூறியும் இதுவரை நிரப்பப்படவில்லை. காலிப்பணியிடங்கள் இருக்கும் போதும் முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடத்த சொல்கிறார்கள். துணை சுகாதார நிலையங்களின் பணத்தை செலவு செய்து இந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடத்துகின்றனர். பொது சுகாதாரத்துறையில் செவிலியர்களை கொத்தடிமைகளாக நடத்துகின்றனர். கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிப்பாதுகாப்பு குறைவாக உள்ளது. பதவி உயர்வு கலந்தாய்வு சீனியர் செவிலியர்கள் பலன் அடையுமாறு நடத்த வேண்டும். செவிலியர்களுக்கு நாளுக்கு நாள் வேலை பளு அதிகரிக்கிறது.
ஆன்லைன் வேலைக்கு தனியாக பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். முகாம் நடத்தும் போது கிராம சுகாதார செவிலியர்களை எடுபிடி மாதிரி பயன்படுத்துகிறார்கள். பணிமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடித்த பிறகு தான் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். செவிலியர்களின் ஊதியத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

