/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.ஐ.ஆர்., மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது துணை முதல்வர் உதயநிதி பேச்சு

ADDED : நவ 16, 2025 01:55 AM

சிங்கம்புணரி: ''வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது,'' என, சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: 76 ஆண்டுகளைக் கடந்தும் தி.மு.க., வெற்றிநடை போடுவதற்கு அதன் கொள்கைகளும், தலைவர்களுமே காரணம். தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் வேளையில், இந்திய அளவில் சிறந்த எதிர்க்கட்சியாக தி.மு.க., மட்டுமே செயல்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தி.மு.க., ஆதரவு ஓட்டுக்களை நீக்கி, குறுக்கு வழியில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது.
இதற்கு எதிராக தி.மு.க., தலைமை சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நம் தொண்டர்கள், வாக்காளர் திருத்தத்தை சிறப்பாக செய்து முடிக்க இரவு பகலாக பணிபுரிந்து வருவது பாராட்டுக்குரியது. ஏழாவது முறையாக தி.மு.க.,வே ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வர் ஆவார் என்றார்.
தவறாக குறிப்பிட்ட துணை முதல்வர் துணை முதல்வர் உதயநிதி தன் பேச்சின் போது, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தி.மு.க., ஆதரிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அ.தி.மு.க.,வும் வாக்காளர் திருத்தத்தை ஆதரிக்கிறது என தவறாக குறிப்பிட்டார்.