ADDED : அக் 23, 2025 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் பெய்த கனமழை காரணமாக, மரங்கள் சாய்ந்து விழுந்ததோடு கல்லூரி சாலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று காலை வரை கனமழை பெய்தது. சாலைகளின் பல பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. காளவாய் பொட்டல், முத்துராமலிங்கத் தேவர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. காரைக்குடி நுாறடி சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து இரு சக்கர வாகனம் மீது விழுந்ததில் சேதமானது.மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.