/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆறே மாதத்தில் ரூ. 39 லட்சம் வீண்; கட்டப்பட்ட கட்டட சுவர் உதிர்கிறது
/
ஆறே மாதத்தில் ரூ. 39 லட்சம் வீண்; கட்டப்பட்ட கட்டட சுவர் உதிர்கிறது
ஆறே மாதத்தில் ரூ. 39 லட்சம் வீண்; கட்டப்பட்ட கட்டட சுவர் உதிர்கிறது
ஆறே மாதத்தில் ரூ. 39 லட்சம் வீண்; கட்டப்பட்ட கட்டட சுவர் உதிர்கிறது
UPDATED : அக் 23, 2025 06:39 AM
ADDED : அக் 23, 2025 03:43 AM

தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஒன்றியத்திலுள்ளது களத்துார் ஊராட்சி. ஊராட்சி அலுவலகம், பள்ளிக்கூடம், அங்கன்வாடி கட்டடம் உட்பட அனைத்தும் ஊரின் நுழைவு வாயிலில் உள்ள மைதானத்தை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடையும் இங்கு தான் உள்ளது.
பால்வாடி பழைய கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால் சில ஆண்டுக்கு முன் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஒரு சில ஆண்டுகளே ஆன நிலையில் பல இடங்களில் வெளிபுறத்தில்பெயின்ட் சிமென்ட் பூச்சு அரித்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 38 லட்சத்தில் கட்டி முடித்து ஆறு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த ஊராட்சி கட்டடத்தை சுற்றியுள்ள பகுதியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளது.ஆறே மாதத்தில் புதிய கட்டடம் அரித்ததால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த புதிய கட்டடத்தில் ஒரு புறம் ஊராட்சிஅலுவலகமும், மற்றொரு புறம் கிராம நிர்வாகஅலுவலகமும் செயல்படுகிறது. இரண்டு அலுவலகமும் இந்த கட்டடத்தில் செயல்படுவதற்கான பெயர் பலகையும் இல்லை. கட்டடத்தின் முகப்பில் சுவர் இப்போதே அரித்து கட்டட மேல்தளத்தில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீர் செல்ல வழியின்றி கட்டடத்திற்குள் கசியும் நிலையில் இருக்கிறது.
கட்டடத்தின் முன்பு பேவர் பிளாக் கல் பதித்தும் மழைநீர் மட்டுமின்றி , ஆழ்துளை கிணறு மோட்டார் இயக்கப்பட்டு சரியாக பராமரிக்கப்படாத நிலையில் தண்ணீர் முழுவதும் கட்டடங்கள் மற்றும் பள்ளி முன்பு தேங்கி நிற்கிறது.
கண்ணங்குடி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆரம்ப நிலையிலேயே இந்த கட்டடத்தையும் அதனை யொட்டி ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் ' முறையாக' மராமத்து செய்ய வேண்டும். கட்டடங்களை கட்ட அரசு பல லட்சங்களை ஒதுக்கினாலும் அதிகாரிகள் கட்டட பணிகளை ஆய்வு செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.