ADDED : மே 16, 2025 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று மாலை கொட்டிய மழையால் நகரில் பல இடங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கியது.
சிவகங்கையில் நேற்று மாலை 5:30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட், அரண்மனை வாசல், சிவன்கோவில், போஸ் ரோடு, காந்தி வீதி உள்ளிட்ட பகுதியில் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி நடைபெறுவதால் பஸ் ஸ்டாண்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் சிரமப்பட்டனர்.
கால்வாய்களில் சாக்கடையோடு மழை நீரும் சேர்ந்து ரோட்டில் ஓடியது. கால்வாய்கள் முறையாக துார்வாராததால் மழைநீர் செல்ல வழியின்றி ரோட்டில் ஓடியதாக வணிகர்கள் புகார் தெரிவித்தனர்.