/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் விடிய விடிய கனமழை: விடுமுறையின்றி மாணவர்கள் தவிப்பு: மாவட்ட நிர்வாகம் மீது பெற்றோர் அதிருப்தி

ADDED : டிச 13, 2024 04:21 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த மழை பெய்தபோதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காததால் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் திணறினர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் கன மழை, நேற்று மிக கனமழை சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் என அறிவித்தது. அதே போன்று இன்று கனமழை இருக்கும் என எச்சரித்துள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை உட்பட பரவலாக மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும், நேற்று பகலில் நல்ல மழை பெய்தது.
கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு அம்மாவட்ட கலெக்டர்களே விடுமுறை அறிவித்தனர். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித முடிவும் எடுக்காமல், கல்வி அதிகாரிகளே விடுமுறை விடும் முடிவை விட்டு விடுகின்றனர்.
சில நேரங்களில் மழை பெய்யும் பகுதியில் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை விடலாம் என்று தெரிவிக்கின்றனர். நேற்று, இன்றும் சிவகங்கையில் கன மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த பின்னரும், நேற்று சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடாமல், பள்ளிகள் செயல்பட்டன.
தற்போது 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடப்பதால், தேர்வுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் கொட்டும் மழையிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்றது பெற்றோர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியது.
இன்றும் சிவகங்கையில் கன மழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளிக்கு விடுமுறை விடும் விஷயத்தில் மாவட்ட நிர்வாகமே முடிவு எடுக்க வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.