/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அதிக மழை பெய்தும் பயனில்லை வறண்ட விவசாய நிலங்கள்
/
திருப்புவனத்தில் அதிக மழை பெய்தும் பயனில்லை வறண்ட விவசாய நிலங்கள்
திருப்புவனத்தில் அதிக மழை பெய்தும் பயனில்லை வறண்ட விவசாய நிலங்கள்
திருப்புவனத்தில் அதிக மழை பெய்தும் பயனில்லை வறண்ட விவசாய நிலங்கள்
ADDED : செப் 08, 2025 06:22 AM
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் 100.8 மி.மீ., மழை கொட்டி தீர்த்தாலும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். வைகை ஆறு பாயும் திருப்புவனம் தாலுகாவில் ஆக., ல் நாற்றங்கால் தயார் செய்து செப்.,ல் நடவு பணிகள் நடைபெறும்.
சம்பா பருவத்தில் சுமார் 3 ஆயிரம் எக்டேரில் நெல் நடவு பணிகள் நடப்பது வழக்கம். கோ 50, என்.எல்.ஆர்., அண்ணா ஆர் 4 , உள்ளிட்ட ஏராளமான நெல் ரகங்கள் நடவு செய்வார்கள். இந்தாண்டு மழை பெய்யாததால் விவசாய பணிகள் தொடங்கப்படவே இல்லை. மோட்டார் பம்ப்செட் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்து அவர்களது தேவை போக விவசாயிகளுக்கும் வழங்குவார்கள். இந்தாண்டு ஆக., ல் மழை இல்லை. செப்டம்பர் தொடங்கி நேற்று முன்தினம் பெய்த மழையும் போதுமானதாக இல்லை. திருப்புவனம் வட்டாரத்தில் 100.8 மி.மீ., மழை அளவு பதிவாகியும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கவே இல்லை.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: திருப்புவனத்தில் பெய்த மழை சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை. மேலும் கடும் வெயில் காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. தற்போது பெய்த மழை விவசாய நிலத்தை ஈரமாக்கியதுடன் சரி நாற்றங்கால் அமைக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கவே இல்லை. நகர்ப்பகுதிகளில் தண்ணீர் வடிய போதிய இடம் இல்லாததால் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. கிராமப்புறங்களில் வயல்வெளிகள் அதிகம் இருப்பதால் தண்ணீர் தேங்கவே இல்லை. திருப்புவனத்தில் பெய்த பத்து செ.மீ., மழை தொடர்ச்சியாக இன்னும் சில நாட்களுக்கு பெய்தால் மட்டுமே நாற்றங்கால் அமைக்க முடியும், இல்லை என்றால் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே விவசாய பணிகள் தொடங்க முடியும், என்றனர்.