/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு; கோடை விவசாயத்தில் நாற்றுக்கள் கருகும் அபாயம்
/
திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு; கோடை விவசாயத்தில் நாற்றுக்கள் கருகும் அபாயம்
திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு; கோடை விவசாயத்தில் நாற்றுக்கள் கருகும் அபாயம்
திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு; கோடை விவசாயத்தில் நாற்றுக்கள் கருகும் அபாயம்
ADDED : மார் 30, 2025 04:53 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் சில தினங்களாக நிலவி வரும் வெம்பா பனிப்பொழிவால் கோடை விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கத்தரி வெயிலே தொடங்காத நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பலரும் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெம்பா எனப்படும் பனிப்பொழிவு காரணமாக கோடை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் வட்டாரத்தில் 800 ஏக்கரில் கோடை நெல் விவசாயம் நடைபெறும், தாமதமாக அறுவடை நடந்ததால் ஒருசில விவசாயிகள் மட்டும் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை எட்டு மணிவரை நிலவும் வெம்பா பனிப்பொழிவால் நெல் நாற்றுகள் கருகி வருகின்றன.
ஏக்கருக்கு உழவு பணி, நாற்றங்கால் தயாரிப்பு என பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் நெல் நாற்றுகள் கருகி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
கத்தரி, வெண்டை உள்ளிட்டவற்றில் பூக்கள் கருகி உதிர்ந்து வருகின்றன. தென்னை மரங்களிலும் கடும் பனிப்பொழிவால் குரும்பை உதிர்ந்து நோய் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வில்லியாரேந்தல் அன்னக்கொடி கூறுகையில்:
கடந்தாண்டை விட பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக தென்னை மரங்களில் குரும்பை உதிர்வதுடன் நோய் தாக்குதலும் அதிகரித்துள்ளது, இதனால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படும், என்றார்.
பரமசிவம் கூறுகையில்: நெற்பயிர்களும் மனிதர்கள் போலத்தான் இரவில் பனி, பகலில் வெயில் என்பதால் வாடி வதங்கி வருகின்றன.
வெம்பா பனிப்பொழிவு எவ்வளவுக்கு எவ்வளவு அடர்த்தியாக உள்ளதோ அதே போல வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும், என்றார்.