ADDED : டிச 23, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பிளஸ் 2விற்கு பின் உயர்கல்வியில் என்ன, எங்கு படிக்கலாம், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி சிவகங்கையில் நடந்தது.
சிவகங்கை ஆர்.எம்.ஆர்., மகாலில், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ் கல்லுாரி சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு கல்லுாரி துணை முதல்வர் குருபாஸ்கர் தலைமை வகித்தார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் படிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் அதிக சம்பளம் தரும் படிப்பு, தரமான கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி என ஆலோசனை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் அனுராதா நன்றி கூறினார்.

