/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயர்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம்
/
உயர்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 30, 2025 10:05 PM
சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறைதீர் முகாம் நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து முன்னிலை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், உதவி ஆணையர் (ஆயம்) ரங்கநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி பங்கேற்றனர். இம்முகாமில் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 47 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 20 மாணவர்களுக்கு அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை வழங்கப்பட்டது. உயர்கல்வியில் விண்ணப்பிக்க தேவைப்படும் பிறப்பு, ஜாதி, முதல் தலைமுறை பட்டதாரி, வருவாய் சான்று இ- சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டன.
முன்னோடி வங்கி மூலம் உயர்கல்விக்கான கல்வி கடன் பெற்றுத்தர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.